actor vijay Wallpaper |
| விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினி விருது!! Posted: 14 Feb 2012 08:46 AM PST சூப்பர் ஸ்டார் ரஜினி பெயரில் இந்த ஆண்டு விஜய்க்கு விருது வழங்கியுள்ளனர்.எடிசன் விருது வழங்கும் விழா கடந்த ஞாயிறன்று சென்னையில் நடந்தது. விழாவில் ஏராளமான சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்றனர். ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷ், நடிகர்கள் ஜெயம் ரவி, ராகவா லாரன்ஸ், ஆர்கே, பேபி சாரா, கோவை சரளா, மயக்கம் என்ன நாயகி ரிச்சா கங்கோபாத்யாயா, இனியா, லட்சுமிராய், லட்சுமி ராமகிருஷ்ணன், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். சிறந்த பாடலாசிரியர் விருது நா முத்துகுமாருக்கும், இசையமைப்பாளர் விருது ஹாரிஸ் ஜெயராஜுக்கும் வழங்கப்பட்டது. இந்த விருது விழாவில், விஜய் தன் படங்களில் ரஜினி பற்றிப் பேசி ரசிகர்களிடம் கைத்தட்டல் வாங்கிய காட்சிகளைக் காட்டினர். பின்னர் ரஜினி விருதினை அவருக்கு வழங்குவதாக அறிவித்தனர். விருதினைப் பெற்றுக் கொண்ட விஜய், ரசிகர்களை ஆஹா ஓஹோவெனப் பாராட்டினார். நண்பன் படத்திலிருந்து ஒரு பாட்டுப் பாடினார். எல்லாம் முடிந்ததும், 'சூப்பர் ஸ்டார் ரஜினி அவார்டு வாங்கியிருக்கீங்க... அவரைப் பற்றி பேசுங்கள்' என நிகழ்ச்சித் தொகுப்பாளர் சிட்டி பாபு கேட்க (மகா சொதப்பல்), விஜய் ஒன்றுமே பேசவில்லை. மீண்டும் மீண்டும் பேசச் சொன்னபோது, சற்று நேரம் மவுனமாக நின்றுவிட்டு, "வரேன்!" என்று கூறிச் சென்றார். English summary Vijay has got Super star Rajini award in an event held at Chennai on Sunday. Though he received the award in the name of Rajini, he refused to talk anything about Rajini! |
| You are subscribed to email updates from actor vijay To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
